சிவகங்கை
100 நாள் வேலைத்திட்ட பணி பெண்கள்- தேனீக்கள் கொட்டி காயம்
|100 நாள் வேலைத்திட்ட பணியில் இருந்த 31 பெண்கள் தேனீக்கள் கொட்டி காயம் அடைந்தனர்.
100 நாள் வேலைத்திட்ட பணியில் இருந்த 31 பெண்கள், தேனீக்கள் கொட்டி காயம் அடைந்தனர்.
தேனீக்கள் கொட்டின
சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெண்கள் பலர், நேற்று சக்கந்தி கிராமம் மடக்குளத்து முனியாண்டி கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டு இருந்தனர். சிலர், அங்கு குப்பைகளை அகற்றியதாக தெரிகிறது. குப்பைகளுக்கு தீ வைத்தபோது அருகில் இருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த மலைத்தேனீக்கள் கலைந்தன. பறந்து வந்த தேனீக்கள், 100 நாள் வேலைத்திட்ட பெண்களை விரட்டி விரட்டி கொட்டின.
31 பெண்கள் காயம்
தேனீக்கள் கொட்டியதில் 31 பெண்கள் காயம் அடைந்தனர். இதில் லதா(45), மீனாம்பாள்(54), ராமாயி(70) ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.