< Back
மாநில செய்திகள்
சிறப்பாக பணியாற்றிய 31 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது
அரியலூர்
மாநில செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய 31 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது

தினத்தந்தி
|
25 Sept 2023 1:13 AM IST

சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 31 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்கப்பட்டது.

அறிவுச்சுடர் விருது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் வட்டார அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். வாசவி ஜுவல்லரி உரிமையாளரும், சோழன் சிட்டி லயன்ஸ் சங்க செயலாளருமான அஸ்வந்த் ராஜா, சோழன் சிட்டி லயன்ஸ் சங்க சாசனத்தலைவர் டாக்டர் கருப்பையா, மாவட்ட தலைவரும், பி.ஜி.ஆர். நகை மாளிகை உரிமையாளருமான பி.ஜி.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக திருச்சி சரக ஊர் காவல் படை உதவி தளபதியும், லயன்ஸ் சங்க நிர்வாகியும், கே.ஆர்.டி. டி.வி.எஸ். உரிமையாளருமான ராஜன் வரவேற்றார்.

நினைவு பரிசு

இதையடுத்து, சிறப்பாக பணியாற்றிய 31 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருதினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், முன்னாள் மாவட்ட ஆளுனரும், தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினர் முகமது ரபிக் ஆகியோர் நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

விழாவில் மாவட்ட தலைவர், ஆர்.கே.செல்வமணி, அன்னை தெரசா கல்வி நிறுவன தாளாளரும், பரப்ரம்மம் பவுண்டேஷன் தலைவருமான முத்துக்குமரன், மண்டல தலைவர் முருகானந்தம், அய்யப்பன், வட்டார தலைவர் சக்தி ரவிச்சந்திரன், வினோத்குமார், சி.பி.ராஜா மற்றும் சோழன் சிட்டி லயன்ஸ் சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட பல்வேறு லயன் சங்கங்களை சார்ந்த உறுப்பினர்கள், ஆசிரியை- ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்