< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
சோலைமலை முருகன் கோவிலில் ரூ.31½ லட்சம் உண்டியல் காணிக்கை
|31 Aug 2023 3:01 AM IST
சோலைமலை முருகன் கோவிலில் ரூ.31½ லட்சம் உண்டியல் காணிக்கை ஆகும்.
அழகர்கோவில்,
அழகர்கோவில் மலை உச்சியில் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவில் உள்ளது. நேற்று அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.31 லட்சத்து 67 ஆயிரத்து 911-ம், தங்கம் 21 கிராமும், வெள்ளி 1120 கிராமும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாட்டு 227 டாலர் நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், மேலாளர் தேவராஜ், பேஷ்கார் ராஜா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.