< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ரூ.31½ லட்சம் உண்டியல் காணிக்கை
|24 May 2023 12:15 AM IST
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ரூ.31½ லட்சம் உண்டியல் காணிக்கை நடைபெற்றது.
தொண்டி,
திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் நேற்று 3 பிரார்த்தனை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.31 லட்சத்து 54 ஆயிரத்து 75 ரொக்கமாகவும், 404 கிராம் தங்கம், ஒரு கிலோ 350 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சிரஸ்தார் சுப்பிரமணியன், அறநிலையத்துறை ஆய்வாளர் உதயகுமார், சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.