< Back
மாநில செய்திகள்
கொசஸ்தலை ஆற்றை பாதிக்கும் வகையில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து 31-ந்தேதி போராட்டம் - சீமான் பேட்டி
சென்னை
மாநில செய்திகள்

கொசஸ்தலை ஆற்றை பாதிக்கும் வகையில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து 31-ந்தேதி போராட்டம் - சீமான் பேட்டி

தினத்தந்தி
|
20 July 2022 12:59 PM IST

கொசஸ்தலை ஆற்றை பாதிக்கும் வட்யில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து 31-ந்தேதி போராட்டம் நடைபெறும்.என சீமான் தெரிவித்தார்.

சென்னை எண்ணூர் வடசென்னை அனல் மின் நிலையம் அருகே காட்டுக்குப்பம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் நடுவே உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொசஸ்தலை ஆற்றில் பைபர் படகு மூலம் மீனவர்களுடன் சென்று பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, ஒருபுறம் கொசஸ்தலை ஆற்றில் நடுவிலே கட்டப்படும் மின் கோபுரங்களால் பாதிப்பு, மற்றொருபுறம் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சுடுநீர், சாம்பல் கழிவுகள் என இவை அனைத்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தை தனியாருக்கு கொடுத்து விட்டு ஆபத்து தரக் கூடிய நச்சு ஆலைகளை அரசு ஏற்று நடத்துகிறது. இந்த ஆற்றை சுற்றி உள்ள ஆலைகளில் இருந்து கழிவுகளால் பல வகை மீன்கள் செத்து மிதக்கிறது. மேலும் ரசாயன கலவைகளை உண்ணும் அந்த மீன்களை உண்டால் மனிதர்களுக்கு மேலும் தொற்று நோய் ஏற்படுகிறது. இந்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்தால் வரும் 31-ந்தேதி இதே இடத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.

ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சொத்து வரி உயர்த்தப்பட்டுவிட்டது. இந்த மின்கட்டணம் உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்