< Back
மாநில செய்திகள்
பெண்கள் பயிற்சியின் 30ம் ஆண்டு விழா - முதல் பெண் ராணுவ வீரர் கேப்டன் லட்சுமி சிலை திறப்பு
மாநில செய்திகள்

பெண்கள் பயிற்சியின் 30ம் ஆண்டு விழா - முதல் பெண் ராணுவ வீரர் கேப்டன் லட்சுமி சிலை திறப்பு

தினத்தந்தி
|
22 Sept 2022 3:07 PM IST

சென்னை அடுத்த பரங்கிமலையில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரரான கேப்டன் லட்சுமி சிலை திறக்கப்பட்டது.

சென்னை,

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பெண்களுக்கான பயிற்சி தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக, இந்தியாவின் முதல் பெண் ராணுவ அதிகாரியான கேப்டன் லட்சுமி பெயர், பெண் ராணுவ அதிகாரிகள் தங்கும் விடுதிக்கு சூட்டப்பட்டது.

பின்னர், அந்த கட்டிடத்தில் மறைந்த கேப்டன் லட்சுமியின் சிலையை ராணுவ பயிற்சி மைய லெப்டினண்ட் ஜெனரல் சஞ்சீவ் சவுகான் திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்