< Back
மாநில செய்திகள்
பட்டா திருத்த முகாமில் 309 மனுக்கள் குவிந்தன
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பட்டா திருத்த முகாமில் 309 மனுக்கள் குவிந்தன

தினத்தந்தி
|
9 July 2023 12:15 AM IST

திருவாடானை தாலுகாவில் நடந்த பட்டா திருத்த முகாமில் 309 மனுக்கள் குவிந்தன,

தொண்டி,

திருவாடானை தாலுகாவில் கடந்த 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பட்டா கணினி திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் இருந்து 309 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தாசில்தார் அறிக்கையுடன் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு அவரது உத்தரவின் பேரில் பட்டா கணினி திருத்தம் செய்யப்படும் என்று தாசில்தார் கார்த்திகேயன் தெரிவித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்