< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
304 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|5 Oct 2023 12:05 AM IST
304 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ஆற்காடு கோ.வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பி.என்.பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிசிரியை எம்.சாந்தி வரவேற்றார்.
ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 304 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதில் ஆற்காடு நகர தி.மு.க. செயலாளர் ஏ.வி.சரவணன், நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட பிரிதிநிதி ஆர்.கோபு மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.