< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேர் கைதாகியுள்ளனர்: 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தகவல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 300 பேர் கைதாகியுள்ளனர்: 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தகவல்

தினத்தந்தி
|
25 Sept 2022 2:31 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கடத்தல் வழக்கில் இதுவரை 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 300 பேர் கைதாகியுள்ளதாக காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று கல்லூரி மாணவர்களுக்கிடையே போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார். அதைதொடர்ந்து போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை எவ்வாறு தடுப்பது என குறும்படம் வாயிலாகவும் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

பின்னர் டி.ஜ.ஜி. சத்யபிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1,200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய 65 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் சொத்துக்களையும் முடக்க நடவடிக்க எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு கோடிக்கும் மேலாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போதை பொருளை கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்