கன்னியாகுமரி
300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
|கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லங்கோடு:
கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லங்கோடு போலீசார் நேற்று காலை வெங்கஞ்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை துரத்தி சென்று சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தனர். ஆனால் கார் டிைரவர் காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். அதைதொடர்ந்து காரில் சோதனை செய்தபோது 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் காரை ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் ரேஷன் அரிசியை கிள்ளியூர் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.