< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
|16 Aug 2023 2:35 PM IST
அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
அச்சரப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் பாலாஜி. காப்பித்தூள் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ரேகா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை, வைர கம்மல், ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.