< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் ஜே.என்.1 கொரோனாவால் 30 பேர் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் ஜே.என்.1 கொரோனாவால் 30 பேர் பாதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
3 Jan 2024 1:18 PM IST

பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஜே.என்.1 கொரோனாவால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், மற்ற மாவட்டங்களில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். புதிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் 4 நாட்களிலேயே குணமாகிவிடுகின்றனர். தமிழ்நாட்டில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. யாரும் பதற்றம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்