< Back
மாநில செய்திகள்
கருங்கல் அருகே 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கருங்கல் அருகே 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
16 Nov 2022 7:00 PM GMT

கருங்கல் அருகே 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருங்கல்:

கருங்கல் போலீஸ் தலைமை காவலர்கள் சாம்சன், ஸ்ரீகுமார் ஆகியோர் கருங்கல் பாலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அட்டைப்பெட்டியில் 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கீழ்குளம் நெடுந்தட்டு பெரியவிளையை சேர்ந்த துளசிதாஸ் மகன் சுதீஷ் (வயது 27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புகையிலை பொருட்களை கேரளாவில் இருந்து கடத்தி வந்து கருங்கல் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 30 கிலோ புகையிலை பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சுதீசை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்