< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தாயில்பட்டி அருகே 30 கிலோ பட்டாசுகள் பறிமுதல்
|10 Oct 2023 1:09 AM IST
தாயில்பட்டி அருகே 30 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி பஸ்நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது வெற்றிலையூரணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புராஜ் (வயது 48) என்பதும், அனுமதியின்றி 30 கிலோ பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.