30-ந்தேதி பாஸ்போர்ட் சேவைகள் நிறுத்தி வைப்பு
|தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவைகள் வருகிற 30-ந்தேதி நிறுத்தி வைக்கப்படுகிறது.
மதுரை,
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை இணையதள தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக வருகிற 30-ந் தேதி ஒரு நாள் மட்டும் மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அனைத்து விதமான பாஸ்போர்ட் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
அன்றையதினம் முன்பதிவு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்கள் விரும்பும் வேறு நாட்களுக்கு முன் அனுமதி மாற்றி தரப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது முன்பதிவு தேதியை தங்களுக்கு ஏற்ற நாளில் மாற்றிக்கொள்ளலாம்.
மதுரை, நெல்லை பாஸ்போர்ட் சேவை மையங்கள், தபால் பாஸ்போர்ட் சேவை மையங்கள் என அனைத்தும் அன்றையதினம் இயங்காது. அத்துடன், மதுரை பாரதி உலா வீதியில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக சேவைப்பிரிவும் செயல்படாது. இது குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் 0452-2521205 மற்றும் 0452-2521204 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.