< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
|8 March 2023 1:35 AM IST
வள்ளியூரில் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பள்ளிக்கூடம் அருகே சாத்தான்குளம் சவேரியார்புரத்தைச் சேர்ந்த சபரி மகாராஜன் (வயது 22), சமூகரெங்கபுரம் நடுத்தெருவை சேர்ந்த மகேஷ்குமார் (23), விஜயநாராயணம் வெங்கட்ராயபுரத்தை சேர்ந்த பார்த்திபன் (26) ஆகியோர் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 90 கிராம் கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.