< Back
மாநில செய்திகள்
துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
22 May 2023 12:15 AM IST

திண்டிவனம் அருகே துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

பிரம்மதேசம்

திண்டிவனம் அருகே துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்திண்டிவனம் அருகே துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

துப்பாக்கியால் சுட்டு வேட்டை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உப்புவேலூரில் 3 பேர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு பறவைகளை வேட்டையாடிக்கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், திண்டிவனம் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வனச்சரக அலுவலர் அஸ்வினி தலைமையில் திண்டிவனம் வன அலுவலர் முருகன், வனக்காப்பாளர் பச்சையப்பன், வனவர் திருமலை ஆகியோர் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.

ஓட்டல், பார்களில் விற்பனை

அப்போது நாட்டுத்துப்பாக்கிகளால் பறவைகளை வேட்டையாடிக்கொண்டிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த ஓதியம்பட்டு நரிக்குறவர் காலனியை சேர்ந்த சங்கர் மகன் கவுதம்(வயது 22), வில்லியனூர் மூர்த்தி நகர், நரிக்குறவர் காலனியை சேர்ந்த செஞ்சியான் மகன் சூர்யா(24), ரமேஷ் மகன் சரவணன்(31) ஆகியோர் என்பதும், கடந்த சில நாட்களாக நாட்டுத்துப்பாக்கிகளால் சுட்டு பறவைகளை வேட்டையாடி, அதனை ஓட்டல் மற்றும் புதுச்சேரியில் உள்ள பார்களில் விற்பனை செய்து வந்ததும், அதில் நல்ல லாபம் கிடைத்ததால் தொழிலாகவே செய்து வந்ததும் தெரியவந்தது.

3 வாலிபர்கள் கைது

இதையடுத்து 3 வாலிபர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த அன்றில் பறவை-16, இந்திய வெள்ளை அரிவாள் மூக்கன்-1, மாடப்புறா-6, உண்ணி கொக்கு-4 ஆகியவற்றையும், 2 நாட்டு துப்பாக்கிகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்