< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
வியாபாரிக்கு 3 ஆண்டு ஜெயில்
|25 March 2023 12:33 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வியாபாரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல் குளத்தை சேர்ந்தவர் அய்யர் என்ற முனியப்பன் (வயது 57). பாத்திர வியாபாரியான இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யர் என்ற முனியப்பனை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து அய்யர் என்ற முனியப்பனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.