< Back
மாநில செய்திகள்
விவசாயிக்கு 3 ஆண்டு சிறை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாயிக்கு 3 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
26 Nov 2022 12:30 AM IST

பழனி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் சப்பல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 42). விவசாயி. இவர், கடந்த 2020-ம் ஆண்டு 14 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல தொல்லை கொடுத்தார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பழனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்