< Back
மாநில செய்திகள்
3 வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

3 வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தினத்தந்தி
|
20 July 2023 12:18 AM IST

3 வாலிபர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கல்லாலங்குடியை சேர்ந்தவர் லாரி டிரைவர் திருப்பதி. இவரது மனைவி சத்யாதேவி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஆலங்குடி வாரச்சந்தைக்கு சென்றுவிட்டு மொபட்டில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் 3 பேர் சத்யாதேவி கழுத்தில் கிடந்த 3½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதையடுத்து பொதுமக்கள் 3 பேரையும் பிடித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பட்டுக்கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 22), சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பழையூரை சேர்ந்த அதியமான் (25), ஆகாஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி விஜயபாரதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மனோஜ் குமார், அதியமான், ஆகாஷ் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்