< Back
மாநில செய்திகள்
அறங்காவலர் குழுவில் 3 பெண்கள்: இந்து சமய அறநிலையத்துறைக்கு கோர்ட்டு பாராட்டு
மாநில செய்திகள்

அறங்காவலர் குழுவில் 3 பெண்கள்: இந்து சமய அறநிலையத்துறைக்கு கோர்ட்டு பாராட்டு

தினத்தந்தி
|
14 Dec 2023 5:50 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதி மீறலும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதி மீறலும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை, மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை, அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம் பெறச் செய்தது கோர்ட்டுக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது எனவும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்