< Back
மாநில செய்திகள்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.1 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்
மாநில செய்திகள்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.1 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள்

தினத்தந்தி
|
17 July 2023 9:49 PM IST

ரூ 2 லட்சம் மதிப்புள்ள 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

திரு.வி.க நகர்,

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7வது மண்டல சுகாதாரத்துறை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யும் பணியில் இறங்கினர்.

இந்நிலையில் பாடி காமராஜர் நகர் 3வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடோனில் திடீர் ஆய்வு செய்தபோது சிறு கடைகளுக்கு சப்ளை செய்யக்கூடிய பிளாஸ்டிக் கிளாஸ், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

ரூ 2 லட்சம் மதிப்புள்ள 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து குடோன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்