< Back
மாநில செய்திகள்
குப்பையில் கொட்டப்பட்ட 3 டன் மாம்பழங்கள்
விருதுநகர்
மாநில செய்திகள்

குப்பையில் கொட்டப்பட்ட 3 டன் மாம்பழங்கள்

தினத்தந்தி
|
11 May 2023 12:30 AM IST

ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 3 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 3 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.

அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் மாம்பழங்கள் அதிகமாக விளைகிறது. இங்கு விளையும் மாம்பழங்களை சிலர் ரசாயன மருந்து தெளித்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் ராஜபாளையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பல்ேவறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

3 டன் மாம்பழங்கள் பறிமுதல்

அப்போது ராஜபாளையம் காந்தி சிலை அருகே சந்தை மார்க்கெட் பகுதியில் உள்ள மொத்த வியாபாரம் செய்யும் பழக்கடையில் ஆய்வு செய்தனர்.

விற்பனைக்காக கொண்டு வரப்படும் மாங்காய்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதேபோல குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் மீது ரசாயனம் தெளிக்கப்பட்டிருப்பதும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட, ரசாயனம் தெளித்த 3 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் உணவு பாதுகாப்பு துறையினர் உரக்கிடங்கில் உள்ள குப்பையில் மாம்பழங்களை கொட்டி அழித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது. அவ்வாறு பழுக்க வைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்