< Back
மாநில செய்திகள்
சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்கா பறிமுதல் - 4 இளைஞர்கள் கைது
மாநில செய்திகள்

சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்கா பறிமுதல் - 4 இளைஞர்கள் கைது

தினத்தந்தி
|
17 March 2024 12:49 AM IST

வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கார்களில் கடத்தப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே 3 சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 3 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த மூன்று சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடமிருந்து 3 டன் குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் 3 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் செய்திகள்