< Back
மாநில செய்திகள்
3 ஆயிரத்து 877 சாலை பணிகள் முடிந்துள்ளது - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை
மாநில செய்திகள்

3 ஆயிரத்து 877 சாலை பணிகள் முடிந்துள்ளது - சென்னை மாநகராட்சி தகவல்

தினத்தந்தி
|
12 Oct 2023 7:24 AM IST

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.ஆயிரத்து 30 கோடியில் 11 ஆயிரத்து 248 சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 3 ஆயிரத்து 877 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 115 சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. 215 சாலைகளில் சீரமைப்பு பணிகள் இந்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் கழிவுநீரை அங்குள்ள காலிமனைகளில் விடுவதால் பொதுமக்களுக்கு மிகவும் இடர்பாடுகள் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து வார்டுகளிலும் புதுப்பிக்க வேண்டிய சாலைகள் மற்றும் சீரமைப்பு தேவைப்படும் சாலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்