< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி வகுப்பறையில் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் காயம்... செங்கல்பட்டு அருகே பரபரப்பு
மாநில செய்திகள்

அரசு பள்ளி வகுப்பறையில் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவிகள் காயம்... செங்கல்பட்டு அருகே பரபரப்பு

தினத்தந்தி
|
8 Aug 2024 7:58 PM IST

செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேற்பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவிகள் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சிறுதாவூர் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை ஒன்றின் கட்டட மேற்பூச்சு இன்று மாலை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்த மாணவிகள் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி ஒருவருக்கு 5 தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்பூச்சு பெயர்ந்து விழுந்த கட்டிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்