அதிமுக அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
|கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிக்க மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். அதிமுக தலைமை கழக அலுவகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் சீல் வைத்தனர். அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 400 பேர் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டோரை பிடிப்பதற்காக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி வன்முறை நடந்த அன்று அதிமுக அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கலவரக்காரர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.