< Back
மாநில செய்திகள்
தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தாலி செயின் பறிப்பு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தாலி செயின் பறிப்பு

தினத்தந்தி
|
22 May 2022 6:51 PM IST

வந்தவாசியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தாலி செயினை பறித்த மர்ம நபர்கள் மேலும் 3 வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளனர்.

வந்தவாசி

வந்தவாசியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் தாலி செயினை பறித்த மர்ம நபர்கள் மேலும் 3 வீடுகளில் கைவரிசை காட்டி உள்ளனர்.

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பெரிய புதிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கனிமொழி. இவர் நேற்று இரவு காற்றுக்காக வீட்டை திறந்து வைத்துவிட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் அவருடைய வீட்சுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு தூங்கிகொண்டிருந்த கனிமொழி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

அதேபோன்று வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் வீட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த வடிவேலு வீட்டிலும் புகுந்து 3 பவுன் நகையை திருடிச்சென்றனர்.

அப்போது தங்க நகைகளுடன் இருந்த கவரிங் நகைகளை வீட்டின் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மேலும் 3 வீடுகளில் கைவரிசை

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜானகிராமனின் மனைவி அமுதாவின் கழுத்திலிருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது அமுதா சத்தம் போட்டுள்ளார். இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதேபோன்று சென்னாவரம் எம்.ஜி.ஆர். நகரில் தனசேகர் என்பரவது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இந்த தொடர்திருட்டு கிறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Related Tags :
மேலும் செய்திகள்