விருதுநகர்
மண் கடத்திய 3 பேர் கைது
|மண் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே சீனியாபுரம் சாலையில் மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை துணை இயக்குனர் தங்க முனியசாமி சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக 3 லாரிகளில் உடைகல் நடைச்சீட்டை வைத்துக்கொண்டு திருட்டு கிராவல் மண் கடத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து மேற்படி 3 லாரிகளையும் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் இதுகுறித்து விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்த குத்தகைதாரர் ராமலட்சுமி, லாரி உரிமையாளர்கள் வெள்ளா குளத்தை சேர்ந்த பாலமுருகன், அழகர்சாமி, லாரி டிரைவர்கள் மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த வீரையா (வயது 33), ஜெயக்குமார் (34), உன்னி பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) உள்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லாரி டிரைவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குத்தகைதாரர் மற்றும் லாரி உரிமையாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.