< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
பொதுமக்களை அச்சுறுத்திய 3 பாம்புகள் பிடிபட்டன
|17 Aug 2022 12:52 AM IST
விருத்தாசலம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 3 பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த ரூபநாராயணநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது70). இவரது வீடு முன்பு உள்ள தோட்ட பகுதியில் 3 சாரை பாம்புகள் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இது குறித்த தகவலின்பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையில், சிறப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஜெயச்சந்திரன், முன்னணி தீயணைப்பாளர் பாண்டியன், வீரர்கள் முகமது புன்யாமீன், செல்வம் ஆகியோர் சென்று அந்த 3 பாம்புகளையும் பிடித்து, காப்புக்காட்டில் விட்டனர்.