< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்
திருச்சி
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'

தினத்தந்தி
|
23 Sept 2022 2:36 AM IST

புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி குழுமணி பகுதியில் உள்ள ராஜசேகர் என்பவரின் பெட்டிக்கடை, கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் டீ மற்றும் பெட்டிக்கடை, உறையூர் பகுதியில் உள்ள செந்தில்குமார் மளிகை கடை ஆகிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததால் குழுமணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, கோட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜன், உறையூர் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் 3 கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு உடனடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை 3 கடைகளுக்கும் 'சீல்' வைத்தனர்.

மேலும் செய்திகள்