< Back
மாநில செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் 3 அறைகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு
மதுரை
மாநில செய்திகள்

கொட்டாம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் 3 அறைகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
15 Jun 2023 2:15 AM IST

கொட்டாம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் 3 அறைகள் வெடித்துச்சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் 3 அறைகள் வெடித்துச்சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெடித்துச் சிதறிய அறைகள்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூரை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி அழகேசுவரி (வயது45). இவர் பட்டாசு தயாரிக்கும் உரிமம் பெற்று திருவிழாக்களின் போது பயன்படுத்தப்படும் பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அழகேசுவரி மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அழகு (60), சந்திரன் (50) ஆகியோர் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே 3 பேரும் அங்கிருந்து உடனடியாக வெளியே ஓடிவிட்டனர். சிறிது நேரத்தில் பட்டாசு உற்பத்திக்கான 3 அறைகளும் வெடித்துச்சிதறி தரைமட்டமாகின. அங்கு தீப்பிடித்து எரிந்தது.

காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர். மேலும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத் தலைமையில் கொட்டாம்பட்டி, மேலூர், சிங்கம்புணரி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்