< Back
மாநில செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருச்சி
மாநில செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

தினத்தந்தி
|
27 Jun 2022 3:04 AM IST

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பெண் பறித்து சென்றார்.

சமயபுரம்:

மண்ணச்சநல்லூரில் இருந்து சமயபுரம் செல்லும் வழியில் உள்ள வெங்கங்குடியில் வசித்து வருபவர் பாப்பாத்தி (வயது 68). இவரது கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் இருந்தபோது, அவ்வழியே காரில் வந்த ஒரு பெண், காரில் இருந்து இறங்கி வந்து நைசாக பாப்பாத்தியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென பாப்பாத்தி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் ஒரு பவுன் தோடு ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த பெண் காரில் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாப்பாத்தி இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்