திருச்சி
மின்வாரிய பெண் ஊழியரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
|மின்வாரிய பெண் ஊழியரிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
கொள்ளிடம் டோல்கேட்:
சமயபுரம் அருகே உள்ள சமயா நகரை சேர்ந்த சீனிவாசனின் மனைவி ரேணுகா(வயது 47). இவர் மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து ரேணுகா வழக்கம்போல் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் ஒன் டோல்கேட் அருகே வந்தபோது ரேணுகாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரேணுகா திருடன்..., திருடன்... என்று சத்தம் போட்டார். அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் ரேணுகா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.