< Back
மாநில செய்திகள்
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து - மதுபோதையில் வந்த நபர் வெறிச்செயல்
மாநில செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேருக்கு கத்திக்குத்து - மதுபோதையில் வந்த நபர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
30 March 2024 10:21 PM IST

மதுபோதையில் வந்த நபர், பெட்ரோல் பங்க் ஊழியர்களை கத்தியால் குத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே, மதுபோதையில் வந்த நபர், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் 3 பேரை கத்தியால் குத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பாதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை என்பவர், மதுபோதையில் செங்குறிச்சி பெட்ரோல் பங்க்கிற்கு வந்து, அங்கிருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ராஜதுரை மறைத்து வைத்திருந்த கத்தியால், பெட்ரோல் பங்க் ஊழியர்களான கண்ணன், சிவசங்கர் மற்றும் முருகானந்தம் ஆகிய 3 பேரை சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த 3 பேரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், ராஜதுரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்