< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
ஆடு திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
|27 Oct 2023 2:15 AM IST
ஆடு திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
அறச்சலூர்
அறச்சலூர் அருகே உள்ள சோழிபாளையம் செங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது50). சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருட்டுபோனது. இதுகுறித்த புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவல்பூந்துறை கிழக்கு வீதியை சேர்ந்த நடராஜ் (60) மற்றும் 16வயதுடைய 2 சிறுவர்கள் ஆடுகளை திருடியதை ஓப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆடு பறிமுதல் செய்யப்பட்டது.