< Back
மாநில செய்திகள்
2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது

தினத்தந்தி
|
27 April 2023 1:55 PM IST

2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் இஜாஸ் அகமது (வயது 27). கடந்த 15-ந்தேதி கூடுவாஞ்சேரி அருகே காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் காரின் பின் பக்க கண்ணாடியை உடைத்து காரில் இருந்த மடிக்கணினியை திருடினர்.

இதேபோல கடந்த 17-ந்தேதி மறைமலைநகர் பகுதியை சேர்ந்த கண்ணன் (68) என்பவர் கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் அருகே காரை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். அப்போது அவரது கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் காரில் இருந்த ரூ.3½ லட்சம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து இஜாஸ் அகமது, கண்ணன் ஆகியோர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்த வழக்கில் திருச்சியை சேர்ந்த நித்தியானந்தம் (25), கோபால கிருஷ்ணன் (38), பிரதீப் (38) ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்