< Back
மாநில செய்திகள்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
4 March 2023 1:11 AM IST

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா (வயது 22), சின்ராஜ் (20), பிரசாத் (18). நண்பர்களான இவர்கள் 3 பேரும் கடந்த ஆண்டு 17 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் கவிதாராமு உத்தரவின்பேரில் ராஜா, சின்ராஜ், பிரசாத் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்