< Back
மாநில செய்திகள்
தேனீக்கள் கொட்டி 3 பேர் படுகாயம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

தேனீக்கள் கொட்டி 3 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
24 Sept 2022 12:55 AM IST

நிலக்கோட்டை அருகே தேனீக்கள் கொட்டி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியை சேர்ந்தவர்கள் சின்னகாளை (வயது 65), பாப்பு (59), பாண்டியம்மாள் (45). இவர்கள் 3 பேரும் மதுரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் இருந்து கலைந்து வந்த தேனீக்கள் அவர்களை கொட்டின. இதில் படுகாயமடைந்த அவர்களை தகவலறிந்து அங்கு வந்த நிலக்கோட்டை தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் தேனீக்கள் கொட்டியதில் அங்கு மேய்ச்சலுக்காக விடப்பட்ட பசுமாடும் காயமடைந்தது. அதனையும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர் பசுமாட்டுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
மேலும் செய்திகள்