திருச்சி
திருச்சி அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் தென்னந்தோப்பில் நின்றிருந்த 3 பேர் கைது
|திருச்சி அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் தென்னந்தோப்பில் நின்றிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் தென்னந்தோப்பில் நின்றிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரோந்து பணி
திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் நேற்று திருப்பராய்த்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நின்றிருந்த 3 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர். விசாரணையில் அவர்கள் முக்கொம்பு அருகே உள்ள திருப்பராய்த்துறை அணலை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 33), சூர்யா (21), சிவ சண்முகம் (21) என தெரியவந்தது.
3 பேர் கைது
பின்னர் அவர்களை சோதனை செய்ததில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 3 அரிவாள்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் எதற்காக வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்களுடன் தென்னந்தோப்பில் நின்று இருந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.