சிவகங்கை
தாய் கண்டித்ததால் வீட்டைவிட்டு சென்ற சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் காரைக்குடியில் 3 பேர் அதிரடி கைது
|தாய் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரையும், இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
காரைக்குடி
தாய் கண்டித்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரையும், இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வீட்டை விட்டு சென்ற சிறுமி
காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, சம்பவத்தன்று தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளாள். மானகிரி செல்லும் சாலையில் நடந்து சென்றபோது கோவிலூரைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது 26) கணேஷ் குமார் (வயது 32) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் அச்சிறுமியிடம் நைசாக பேசி அவளை பாரிநகரில் உள்ள வெண்ணிலா என்ற பெண்ணின் வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
பின்னர் தினேஷ்குமாரும், கணேஷ்குமாரும் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின் அவர்களின் நண்பர் கரண் (26) என்பவரை அங்கு வரவழைத்துள்ளனர். அவரும் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின் அவர்கள் 3 பேரும் சிறுமியிடம் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி, கூட்டிச் சென்று அவளது வீட்டருகே விட்டுச் சென்றுள்ளனர். மறுநாள் காலை அச்சிறுமி கண்மாய்க்கு குளிக்க சென்றபோது அங்கு வந்த 3 பேரும் அச்சிறுமியை கட்டாயப்படுத்தி திருச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு ரெயில் நிலையத்தில் தங்க வைத்ததாகவும் பின் மீண்டும் காரைக்குடி வெண்ணிலா வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு மீண்டும் 3 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது.
சிறுமியை காணாமல் அவளது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் மறுநாள் காலையில் சிறுமி சோர்வடைந்த நிலையில் வீட்டுக்கு வந்துள்ளாள். தாயிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளாள்.
3 பேர் கைது
சிறுமிக்கு நடந்த கொடுமைகள் குறித்து அளித்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமார், கணேஷ் குமார், இவர்களுக்கு உடந்தையாக இருந்த வெண்ணிலா (30) ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கரண் என்பவரை தேடி வருகின்றனர்.