< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
சிகரெட்டில் கஞ்சா வைத்து புகைத்த 3 பேர் கைது
|6 Sept 2023 1:42 AM IST
சிகரெட்டில் கஞ்சா வைத்து புகைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வளநாடு கைகாட்டியில் உள்ள காரணிக்குளத்தில் சிலர் சிகரெட்டில் கஞ்சா வைத்து புகைத்துக் கொண்டிருப்பதாக வளநாடு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சிகரெட்டில் கஞ்சா வைத்து புகைத்துக் கொண்டிருந்த சின்னக்கோனார்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 23), பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் (24), இச்சடிப்பட்டியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.