< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மதுவிற்ற 3 பேர் கைது
|4 Oct 2022 12:15 AM IST
மதுவிற்ற 3 பேர் கைது
திருவட்டார்:
திருவட்டார் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கண்ணனூர் உடையார்விளை பகுதியில் சென்றபோது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பால்நாடார் (வயது 58) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், திருவட்டார் பஸ் நிலையம் அருகில் மது விற்றதாக மாத்தாரைச் சேர்ந்த முத்துக்குமார் (47) என்பவரை கைது செய்து இருந்து 6 மது பாட்டில்களையும், சாரூர் பகுதியில் மதுவிற்ற செல்வன் (49) என்பவரை கைது செய்து 18 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.