< Back
மாநில செய்திகள்
மதுபானம் விற்ற 3 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மதுபானம் விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
4 Oct 2023 1:15 AM IST

வேடசந்தூர் அருகே மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர் அருகே உள்ள சித்தமரம் நால்ரோடு மற்றும் பூத்தாம்பட்டி குளப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக மதுப்பாட்டில்கள் விற்ற எரியோடு அருகே உள்ள மத்தனம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 44), தாடிக்கொம்பு அருகே உள்ள தெப்பக்குளத்துப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் (44), அசோக்குமார் (29) ஆகிய 3 பேரை கையும்களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்