< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
குன்றத்தூரில் சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது
|31 March 2023 2:17 PM IST
குன்றத்தூரில் சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அருகே உள்ள குப்பைமேடு அருகே உள்ள சுடுகாட்டில் சிலர் அமர்ந்து மதுகுடித்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் பிடிபட்டவர்கள் கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாலாஜி என்ற காக்கா பாலாஜி (24), யுவராஜ் (25), தாமோதர பெருமாள் (23) என்பது தெரியவந்தது இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இருசக்கர வாகனத்தில் வைத்து போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க சுடுகாட்டில் வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.