< Back
மாநில செய்திகள்
மறைமலைநகர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்ற 3 பேர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மறைமலைநகர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
1 Aug 2022 3:21 PM IST

மறைமலைநகர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்ற 3 பேர் கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பேரமனூர் பகுதியில் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த தியாகராஜன் (வயது 35), ராஜேந்திரன் (63) இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதே போல ஆப்பூர் சாலையில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த தமிழ்மணி (38) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்