< Back
மாநில செய்திகள்
வீட்டில் பதுக்கி வைத்து    மது விற்ற 3 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
28 Jan 2023 12:15 AM IST

குடியரசு தினத்தன்று வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற 3 பேர் கைது

குலசேகரம்,

குடியரசு தினத்தன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் குலசேகரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடைபெறுவதாக குலசேகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த வகையில் அஞ்சுகண்டறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 319 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ராபி (வயது 46) என்பவரை கைது செய்தனர்.இதே போன்று சேக்கல் பகுதியில் உள்ள வீட்டில் ரமேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 55 மதுபாட்டில்களையும், கல்லடி மாமூடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ராஜேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 45 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்