கன்னியாகுமரி
குமரியில்மது விற்ற 3 பேர் கைது
|குமரியில்மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் இடலாக்குடி அருகே உள்ள வெள்ளாடிச்சி விளையை சேர்ந்த குமார் (வயது 50) என்பதும், மது வாங்கி விற்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சாக்கு பையில் வைத்து இருந்த 8 மதுபாட்டில்கள், மேலும் மது விற்ற ரூ.2,100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதே போல் ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் வெள்ளமடம் அருகே உள்ள கரையான் குழி பக்கம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மது வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த வேம்பத்தூர் காலனியை சேர்ந்த வின்சென்ட் (44) என்பவரை போலீசார் கைது செய்து 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தராஜ் தலைமையில் போலீசார், பூதப்பாண்டி வடக்கு தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு மதுவை பதுக்கி விற்ற கண்ணன் (38) என்பவரை போலீசார் கைது செய்து 38 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.