< Back
மாநில செய்திகள்
மது விற்ற 3 பேர் கைது
நீலகிரி
மாநில செய்திகள்

மது விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
27 Jan 2023 12:15 AM IST

மது விற்ற 3 பேர் கைது

ஊட்டி

ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் உள்ள பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். உடனே கையில் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர். அதில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர் நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர், ஊட்டியை சேர்ந்த செரிப் என்பதும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று ஊட்டி குழந்தை இயேசு ஆலயம் பகுதியில் மது விற்ற எல்க்ஹில் பகுதியை சேர்ந்த அபுதாஹிர், கல்லட்டி பகுதியில் மது விற்ற ரவிச்சந்திரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்