< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மது விற்ற 3 பேர் கைது
|12 July 2022 1:21 AM IST
நெல்லை அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சீவலப்பேரி மறுகால்தலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றதாக கழுகுமலையை சேர்ந்த தவசிபாண்டியன் மகன் சதீஷ்குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனா். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் சிவந்திபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மது விற்றதாக கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்த முத்துகருப்பன் (56), கருங்குளத்தை சேர்ந்த மாடசாமி ஆகியோரை வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.